| ADDED : ஆக 07, 2024 05:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதைத் தொடர்ந்து, மைதானம் சீரமைக்கும் பணி செய்தல், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான பந்தல் அமைப்பது, பாதுகாப்பு பணி, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி, மைதானம் சுற்றி அலங்கரித்தல், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்.சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை ஒருங்கிணைந்து, சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரை மற்றும் ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய்நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.