உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலை கல்லுாரியில் 22ம் தேதி கலந்தாய்வு

அரசு கலை கல்லுாரியில் 22ம் தேதி கலந்தாய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., - பி.காம்., பாடப் பிரிவுகளுக்கு வரும் 22ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குகிறது.விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாக, இளங்கலை பி.ஏ., தமிழ், வரலாறு, பொருளாதாரம், பி.காம்., பாடப்பிரிவுகளுக்கு வரும் 22, 23 தேதிகளில் கலந்தாய்வுநடக்கிறது.இதில், 22ம் தேதி இளங்கலை பி.ஏ., தமிழ் சுழற்சி 1, 2 காலை 10:00 மணிக்கு தமிழ் பாட தகுதி மதிப்பெண் 87 முதல் 85 வரையிலும், பி.காம்., சுழற்சி 1 காலை 11:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 324 முதல் 317 வரைநடக்கிறது.பி.காம்., சுழற்சி 2 பகல் 12:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 314 முதல் 308 வரையிலும், பி.ஏ., வரலாறு, பொருளியல் சுழற்சி 2 பகல் 12.00 மணிக்கு தகுதி மதிப்பெண் 245 முதல் 230 வரைநடக்கிறது.தொடர்ந்து, 23ம் தேதி இளங்கலை பி.ஏ., வரலாறு, பொருளியல் சுழற்சி 2 பகல் 12:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 224 முதல் 210 வரையிலும், அறிவியல் தொழில் பிரிவு பயின்று பி.ஏ., விண்ணப்பித்தோருக்கு தகுதி மதிப்பெண் 279 முதல் 275 வரை நடக்கிறது.இந்த கலந்தாய்வில் பங்கேற்போர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் இரு நகல்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.பாஸ்போட் சைஸ் போட்டோ 3, பெற்றோர் அல்லது பாதுகாவலர் போட்டோ 1, வங்கி கணக்கு புத்தகம் நகல் 1, ஆதார் நகல் 2, உரிய சேர்க்கை கட்டணத்தை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ