உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீ வித்யோதயா கல்வியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ வித்யோதயா கல்வியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் திருப்பச்சாவடிமேடு ஸ்ரீ வித்யோதயா கல்வியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் சங்கரய்யா வரவேற்று, ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றினர்.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 4, 5, 6ம் ஆண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.வித்யோதயா துவக்கப்பள்ளி நிறுவனர் ஞானாம்பாள், கல்வியியல் கல்லுாரி இயக்குனர் ராஜி, ஜி.ஏ., கல்வி அறக்கட்டளை செந்தில்நாதன், மீனாட்சி மருத்துவக் கல்லுாரி டாக்டர் சுகன்யா.பழனிவேல் ஐ.டி.ஐ., ராஜேந்திரன், கே.ஜி., கல்வி குழுமம் செந்தில், நடராஜ் ஐ.டி.ஐ., மேகநாதன், அறங்காவலர்கள் அய்யாசாமி, சாரங்கபாணி, மீனா அனந்தசயனம், பன்னீர்செல்வம், ஆசிரியர் கல்வியியல்பல்கலைக்கழக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 263 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ