உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரியாத்தாள் அம்மன் கோவிலில் தீமிதி விழா

அரியாத்தாள் அம்மன் கோவிலில் தீமிதி விழா

செஞ்சி: மேல்அருங்குணம் அரியாத்தாள் அம்மன் கோவிலில் தீமிதி மற்றும் தேர்திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு 14ம் தேதி விநாயகர் பூஜையும், அரியாத்தாள் அம்மனுக்கும் மூலவருக்கும் சிறப்பு யாகமும் நடந்தது. 108 பால் குடம் அபிஷேகமும், கெங்கையம்மன் கோவிலில் இருந்து பூங்கரக ஊர்வலமும், சாகை வார்த்தலும், அரியாத்தாள் அம்மன் கோவிலில் ஊரணிப்பொங்கலும் நடந்தது. இரவு வாணவேடிக்கையும், விநாயகர், அரியாத்தாள் அம்மன், கெங்கையம்மன், மாரியம்மன் முத்து பல்லக்கும் நடந்தது. நேற்று விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வந்து கெங்கையம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு தீமிதி விழாவும், திருத்தேர் ஊர்வலமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ