உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வைரபுரம் கிராமத்தில் தீமிதி திருவிழா

வைரபுரம் கிராமத்தில் தீமிதி திருவிழா

திண்டிவனம், திண்டிவனம் அருகேவுள்ள வைரபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது.அக்னி வசந்த விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கயது. தொடர்ந்து மூலவர், உற்சவர் அம்மன்களுக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், மாலையில் மகாபாரத சொற்பொழிவும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் வீதி உலாவும், மகாபாரத தெருக் கூத்து நடந்தது.இதனைத் தொடர்ந்து அரவான் களபலியும், துரியோதனன், படு களமும் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அக்னி வசந்த விழா என்ற தீமிதி திருவிழா நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ