உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேங்காய் கடையில் தகராறு: 3 பேர் கைது

தேங்காய் கடையில் தகராறு: 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேங்காய் கடையில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 41; இவர், அதே பகுதியில், தேங்காய் கடை வைத்துள்ளார். இவரது கடையில் சித்தேரியைச் சேர்ந்த விஜய், 30; என்பவர் பணிபுரிந்து வந்தார்.கடந்த 14ம் தேதி, தேங்காய் அதிகமாக காணாமல் போகிறது. சரியாக கணக்கும் காட்டுவதில்லை என்பதால் விஜய்யை வேலைக்கு வர வேண்டாமென கூறி, அவரை வேலையை விட்டு சத்தியநாராயணன் நிறுத்தியுள்ளார்.இந்நிலையில், விஜய் உறவினர்களான, சித்தேரிகரையைச் சேர்ந்த அருண்குமார், 28; சூர்யா, 25; ஆறுமுகம், 43; ஆகியோர், 16ம் தேதி தேங்காய் கடைக்குச் சென்று, சத்தியநாராயணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், அருண்குமார், சூர்யா, ஆறுமுகம் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, நேற்று அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ