உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை ஆனந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.உதவி தலைமை ஆசிரியை குணசீலன் வர வேற்றார். முண்டியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி பேசுகையில், 'தினமலர் - பட்டம்' இதழில் அன்றாட உலக நிகழ்வுகள் முதல் அறிவியல் செய்திகள் வரை வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இதழினை படித்து எதிர்காலத்தில் போட்டி திறன் தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்றார்.ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி, ேஹமலதா, தீப கனிமொழி, கல்விக்குழு மகேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை