திண்டிவனம் : திண்டிவனத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.திண்டிவனம் ஜே.வி.எஸ்.மகாலில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொறுப்பாளர் சேகர், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சிசிவா, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், யோகேஸ்வரிமணிமாறன், நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பாபு, ஆடிட்டர் பாஸ்கர், ராஜா, சந்திரன், கோபிநாத், நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், எம்.பி.,தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொண்டர்கள் அப்செட்
வடக்கு மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் சேகர் நியமித்த பிறகு நடக்கும் முதல் செயலவீரர்கள் கூட்டம் என்பதாலும், லோக்சபா தேர்தல் வெற்றி பெற்றுள்ளதால், அசைவ விருந்து வழங்கப்படும் என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் அனைவருக்கும் வடை, பாயசத்துடன் சுத்த சைவ விருந்தை அமைச்சர் மஸ்தான் கட்சியினருக்கு பரிமாறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதற்கு, அங்கு தொண்டர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட நிலையில், திண்டிவனத்தில் நடந்த கூட்டத்தில் சைவ சாப்பாடு வழங்கியதால், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.