| ADDED : ஜூன் 26, 2024 11:04 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை,வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரிகளுடன் தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை நட த்தினார்.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10 ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை யொட்டி நிலை கண் காணிப்பு குழு அதிகாரிகள் தொகுதியில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் பணம் ஏதாவது வழங்குகிறார்களா எனவும், சாலைகளில் செல்லும் வாகனங்களில் பணம் பரிசு பொருட்கள் கடத்தி எடுத்தும் செல்லப்படுகிறதா என தீவிர மாக கண்காணித்து வருகின்றனர் .நேற்று பிற்பகல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் மணீஷ்குமார் மீனா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் செலவின கணக்குகள் சரியாக கணக்கெடுப்பது, கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து தடுப்பது, பிரச்சாரத்தின் போது வீடியோ பதிவு செய்து கண்காணிப்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.