உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரிக்கு தரசான்று

இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரிக்கு தரசான்று

விழுப்புரம்: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு தரவரிசையில் இ.எஸ் கலை அறிவியல் கல்லூரி 85வது இடம் பெற்றுள்ளது.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 584 தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், திறன் மேம்பாடு, தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு திறன் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கியதன் அடிப்படையில், தற்போது, தரவரிசை செய்யப்பட்டுள்ளது. இதில் 2023-24ம் கல்வியாண்டில், விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 82 பேர் வேலைவாய்ப்பை பெற்று பணி அமர்த்தப்பட்டனர். இச்சாதனைக்காக “நான் முதல்வன் திட்டம்” இ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 85வது தரசான்று வழங்கி சிறப்பித்துள்ளதாக, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி