விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் முப்பெரும் கலை விழா நடந்தது.இ.எஸ்., கல்விக்குழுமம் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார். விழாவில், பல்வேறு அரசு மற்றும் தனியார் கலை கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில், நடனம், பாடல், பேச்சு, கவிதை, இசைக்கருவி வாசித்தல், நாடகம் ஆகியவை நடந்தது. இதில், வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாடகி மஞ்சம்மாள், நாடக கலைஞர் கவிதாசக்தி, வித்வான் ஜெயச்சந்திரன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நான்கு கலைஞர்களின் சமூக சேவையை பாராட்டி, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில், இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி துணை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.