மேலும் செய்திகள்
நாளை மின்தடை
1 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
1 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
1 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
1 hour(s) ago
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு, சி.ஏ.எம்.எஸ்., நிறுவனம், சென்னை நேத்ராலயா கண் மருத்துவமனை சார் பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் கலிவரதன், தி.மு.க., மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சீனு செல்வரங்கம், கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சடையாண்டிக்குப்பம் அருண், சீத்தாராமன் ஆகியோர் வரவேற்றனர். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் குத்துவிளக் கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.முகாமில், சென்னை நேத்ராலயா கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஷிமா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.தாஸ்யா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமன், ஊராட்சி துணைத் தலைவர் கிரிஜா, ஒன்றிய கவுன்சிலர் மாலதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago