உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அடுத்த சத்தியகண்டநல்லுார் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பாதை தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் டபிள்யு.சி.டி.டிரஸ்ட் இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் நித்திஷா, முகாம் இயக்குநர் ராகவன் தலைமையிலான குழுவினர் 200க்கும் மேற்பட்டடோருக்கு பரிசோதனை செய்தனர். இதில், 19 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில், தாசில்தார் முத்து, இன்ஸ்பெக்டர் குருபரன், பி.டி.ஓ., சண்முகம், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோஸ்பிரேம் குமார், வித்யாதேவி, வித்துாஸ் துரைராஜ், ஊராட்சி தலைவர்கள் லுாயிஸ், சுமதி சக்திவேல், பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் நிறுவனர் சகாயராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை