மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி
03-Mar-2025
விழுப்புரம்: காணை அருகே மயங்கி கீழே விழுந்த விவசாயி இறந்தார்.காணை அடுத்த சிறுவாக்கூரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; விவசாயி. இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில், காயமடைந்த அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Mar-2025