மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
08-Mar-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், தலைவர் சகாபுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, பாலசுப்ரமணியன், மாசிலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட விவசாயிகளுக்கு, பெஞ்சல் புயல் நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும். பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசே நேரடியாக நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
08-Mar-2025