மகனை தாக்கிய தந்தை கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகனைத் தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரைச் சேர்ந்தவர் தனஞ்செயன், 70; இவரது மகன் சிலம்பரசன், 32; இவர், தினமும் மது அருந்த தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். சம்பவத்தன்று தனஞ்செயனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்து சிலம்பரசனை திட்டி, தாக்கினார்.சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தனஞ்செயனை கைது செய்தனர்.