உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

வானூர் : காணாமல் போன தந்தையை கண்டுபிடித்து கொடுக்குமாறு, மகன் போலீசில் புகார் செய்தார். வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் ஜெயகணேஷ் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் மசாலா பொருட்கள் ஏஜென்சி எடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக டாடா ஏசி வாகனம் லோனில் வாங்கி வியாபாரம் செய்து வந்தார். வாங்கிய கடனை அடைப்பது குறித்து பாஸ்கரன் வீட்டில் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் தணிகைவேலன், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன பாஸ்கரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி