மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
28-Feb-2025
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 52; கொத்தனார். இவர், கடந்த மாதம் 11ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து இவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Feb-2025