உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், கந்தப்பா நகரைச் சேர்ந்த குப்தா மகள் அனுராதா, 46; இவரது இன்ஸ்டாகிராமுக்கு, கடந்த 26ம் தேதி, ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக லிங்க் வந்துள்ளது.அந்த லிங்க்கில் சென்றபோது, வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர் புதிதாக ஒரு வெப்சைட் லிங்க் அனுப்பியுள்ளார்.அதன் உள்ளே சென்ற அனுராதா, அதில் குறிப்பிட்டபடி, டிரேடிங் செய்ய 6 தவணைகளில் ரூ.7 லட்சம் அனுப்பினார். அதிலிருந்து, ரூ.20 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. மீதித் தொகை வராத நிலையில், மேலும் பணம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.ஏமாற்றப்பட்டதை அறிந்த அனுராதா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ