உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டமங்கலம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

கண்டமங்கலம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் பனிமொழிசெல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், ஊராட்சி துணை தலைவர் பத்தமாவதி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சேவியர் சந்திரகுமார் வரவேற்றார்.ஒன்றிய சேர்மன் வாசன் விழாவிற்கு தலைமையேற்று 247 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார்.சேர்மன் வாசன் பேசுகையில் இந்த பள்ளி தனியார் பள்ளிகளுக்கு நிகராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிக்கு ரூ.25 ஆயிரம் கல்வி ஊக்கப் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி ஊக்கப் பரிசு எனது சொந்த செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீனுசெல்வரங்கம், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழாசிரியை செல்வமேரி சந்திரிகா தொகுத்து வழங்கினார். மேலாண்மை குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி