உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச இருதய பரிசோதனை முகாம்

இலவச இருதய பரிசோதனை முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜங்ஷன் அரிமா சங்கம், தேசிய தன்னார்வலர்கள் சைவை மையம், ஸ்ரீ வள்ளி சுப்ரமணியன் அறக்கட்டளை சார்பில், இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு, சென்னை அண்ணா பல்கலைக் கழக, கூடுதல் பதிவாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர் தேவநாதன் வரவேற்றார். விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில் முகாமை தொடங்கி வைத்தார்.சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை மருத்துவக் குழுவினர், முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு, இருதய பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். அரிமா சங்கத்தினர், பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ