உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

மயிலம்: திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப், உமா மருத்துவமனை, கருத்தரிப்பு மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் கூட்டேரிப்பட்டில் நடந்தது.முகாமிற்கு, ஏழுமலை தலைமை தாங்கினார், சுகுமார் வரவேற்றார். முகாமை முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன் துவக்கி வைத்து பேசினார். டாக்டர்கள் அமுதாம்பிகை, உமா பிரியா, பிரபு ஆகியோர் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.நிகழ்சியில் லயன்ஸ் மாவட்ட தலைவர் சாய்நாத் பிரபாகரன், சண்முக சுந்தரம், சஞ்சீவி, சித்தார்த்தன் ரவிகுமார், கிரிதரன், ராயல் ஜெய்லானி, விஜய்சிங், அய்யப்பன், முகாம் அலுவலர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் நவநீதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை