உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குண்டும், குழியுமாக மாறிய கழுவெளி தார்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும், குழியுமாக மாறிய கழுவெளி தார்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

மரக்காணம் : மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் - ஆத்திக்குப்பம் கழுவெளி தார்சாலை குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் - ஆத்திக்குப்பம் கழுவெளி ஏரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 100 மீட்டர் துாரத்தில் தரைப்பாலம் மற்றும் 3 கி.மீ., துாரத்திற்கு தார்சாலை போடப்பட்டது.தரைப்பாலம், தார்சாலை தரமற்று போட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைக்கு தரைபாலம் தாக்குப் பிடிக்காமல் உள்வாங்கியது. மேலும் தார்சாலை மழையில் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வண்டிப்பாளையம், கோட்டிக்குப்பம், கிளாப்பாக்கம், நடுக்குப்பம் கிராமங்களில் இருந்து ஆத்திக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்லும் பொதுமக்கள். அந்த வழியாக செல்லாமல், கந்தாடு, மரக்காணம் வழியாக புதுச்சேரி செல்கின்றனர். இதனால் 15 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனுவாகவும், நேரிலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தார்சாலை மற்றும் தரைப்பாலத்தை சரி செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ