| ADDED : ஏப் 17, 2024 11:40 PM
விழுப்புரம் : விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் முரளி சங்கர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கர் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று மாலை பிரசாரத்தை முடித்து பேசியதாவது; விழுப்புரம் தொகுதி எம்.பி.,யாக 5 ஆண்டுகள் இருந்த ரவிக்குமார் மக்களை சந்தித்து ஓட்டுகேட்டு செல்லகின்றார். மக்களுக்காக அவர் நல்ல திட்டங்களை கொண்டுவந்திருந்தால் இன்று அவர் பணமின்றி ஓட்டுகளை பெற்றிருக்கலாம். மக்கள் சுதந்திரமாக செயல்படவும், உங்களுக்கான மத்திய அரசிடம் பேசி நல்ல திட்டங்கள் கொண்டுவந்து சேர்க்க எனக்கு ஒரு முறை மாம்பழம் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். பிரசாரத்தில் வேட்பாளர் முரளிசங்கர் பேசும் போது, கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்து கொண்டே பேசினார். பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி, தலைவர் தங்கஜோதி உட்பட கூட்டணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.