உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் டிரைவர் தற்கொலை

அரசு பஸ் டிரைவர் தற்கொலை

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார் கிராமத்தைச் சேர்ந்த மோகன், 56; அரசு பஸ் டிரைவர். இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டின் பின்னால் இருந்த மொபைல் போன் டவரில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மனைவி ஜோதிலட்சுமி, 48; அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை