உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணை ஒன்றியத்தில் 393 பேருக்கு கனவு இல்ல வீடு ஒதுக்கீடு

காணை ஒன்றியத்தில் 393 பேருக்கு கனவு இல்ல வீடு ஒதுக்கீடு

விழுப்புரம் : காணை ஒன்றியத்தில் கனவு இல்ல திட்ட ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது.கெடார் அடுத்த வீரமூர் ஊராட்சியில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி வரவேற்றார்.அமைச்சர் பொன்முடி, 393 பயனாளிகளுக்கு, 13 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான கனவு இல்ல வீடுகள் கட்டுவதற்கான உத்தரவையும், சித்தேரிப்பட்டு ஊராட்சியில் 105 பேருக்கு இலவச வீட்டுமனை இ-பட்டாவையும் வழங்கி பேசினார்.மாவட்ட துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விக்னேஷ், உதவி செயற்பொறியாளர் நித்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார்.கல்விக்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், வீரமூர் ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி ராமநாதன், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், ஞானசீனிவாசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்