மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
23-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், மாதாந்திர குற்ற பதிவுகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, பேசுகையில், 'மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை உரிய விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நீதிமன்றத்தில் நிலவையில் உள்ள பிடிவாரண்ட் மற்றும் சம்மன் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்றிட வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை உரிய விசாரணை செய்து, உடனுக்குடன் சி.எஸ்.ஆர்., மற்றும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்' என்றார்.தொடர்ந்து, மாவட்ட காவல்துறை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் பராமரிப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.கூடுதல் எஸ்.பி.,க்கள் திருமால், இளமுருகன், தினகரன், ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார் குப்தா மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
23-Jan-2025