மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி துவக்க விழா
திண்டிவனம் : திண்டிவனத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி துவங்கியது.அமைச்சர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வால்டர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேகர், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மணிமாறன். பொதுக்குழு உறுப்பினர் கதிரசேன், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில், கேரளா, திருப்பதி, பெங்களூரு, சென்னை, காரைக்கால், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 37 அணிகள் பங்கேற்றன.