உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆலம்பூண்டியில் சுதந்திர தின விழா

ஆலம்பூண்டியில் சுதந்திர தின விழா

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி மற்றும் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி கொடியேற்றினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் சாந்திபூபதி, சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தினர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் கல்வி இயக்குனர் டாக்டர் மணிகண்டன், நிர்வாக அலுவலர் சிவசங்கரன், கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், சசிகுமார், செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை