உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி துவக்கம்

அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி துவக்கம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி துவங்கியது.விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் தெருக்கூத்து, பறையாட்டம், பம்பை, மல்லர் கம்பம் ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 17 வயது முதல் அனைவரும் கற்கலாம். கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆண்டு கட்டணம் 500 ரூபாய் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.விழுப்புரம் அரசு இசை பள்ளியில், இந்தாண்டு துவங்கிய பயிற்சி வகுப்பில், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரி பட்டதரி தலைமை தாங்கினார். பயிற்சி ஆசிரியர்கள் செந்தில்குமார், அன்பரசன், ஜனார்த்தணன், ஏழுமலை முன்னிலை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தனர். ஆசிரியர் ஏழுமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ