உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

திண்டிவனம் : கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களிடம் 5 சவரன் செயின் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்திலுள்ள அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசில், ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த மணி மனைவி அஞ்சலாட்சி, 60; என்பவரிடம் 3 சவரன் செயின் மற்றும் கோனேரிக்குப்பத்தை சேர்ந்த ராஜகோபால் மனைவி வசந்தா, 45; என்பவரிடமிருந்து 2 சவரன் செயினை மர்ம கும்பல் பறித்து சென்றது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஒலக்கூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை