| ADDED : ஜூலை 20, 2024 05:43 AM
செஞ்சி: செஞ்சி சாணக்கியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.பள்ளி தாளாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி முதல்வர் சேகர் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கோலம், ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. மழலை வகுப்பினர்களுக்கு மாறுவேட போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் வினு கல்பனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியை நதியா நன்றி கூறினார். விழுப்புரம்
ரங்கநாதன் ரோடு வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைமை ஆசிரியை ரேவதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மனோ முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர் வேல்முருகன், முன்னாள் முதல்வர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் நன்றி கூறினார்.