உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 15ம் தேதி மாலை எஜமான சங்கல்பமும், விசேஷ ஆராதனை முதல்கால யாக சாலை பூஜை, இரவு சாற்று முறையும், பிரசாத விநியோகமும் நடந்தது. 16ம் தேதி கும்ப ஆராதனம், விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், விமான கலச ஸ்தாபிதம், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும், இரண்டாம் கால யகாசாலை பூஜையும் நடந்தது. மாலை கோபூஜை, கண் திறத்தலும், மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம், சர்வதேவார்ச்சனமும், நாம சங்கீர்தனமும் நடந்தது. நேற்று காலை விஷ்வருபம், புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், விசேஷ ஹோமம், மஹா பூர்ணாஹீதியை,தொடர்ந்து யாத்ராதானம், கலச புறப்பாடாகி 7.10 மணிக்கு விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து வேணுகோபாலர், பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், 10.15 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் மகா தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ