உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எல்லைப்பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எல்லைப்பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.யாகசாலை பூஜை மற்றும் அபிஷேகங்களை திருவாமாத்துார் ஈசான சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை