| ADDED : ஜூலை 29, 2024 05:22 AM
விழுப்புரம், : காணை ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கெடார் அடுத்த தி.கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட நிர்வாகிகள் முருகன், இளந்திரையன், கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், காணை ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா ( தெற்கு), ஆர்.முருகன் (வடக்கு), ஆர்.பி.முருகன் ( மத்திய ஒன்றியம்), ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகளை துவக்கிட வேண்டும். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் கவுதமசிகாமணியை நியமித்த தலைமைக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.