உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோபத்தை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கட்டும் பா.ம.க., மாநிலத் தலைவர் அன்புமணி பேச்சு

கோபத்தை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கட்டும் பா.ம.க., மாநிலத் தலைவர் அன்புமணி பேச்சு

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கட்டும்' என பா.ம.க., மாநிலத் தலைவர் அன்புமணி பேசினார்.விக்கிரவாண்டி தொகுதி காணை பகுதியில் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அவர் பேசியதாவது:இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த உழைப்பாளி வேட்பாளர் அன்புமணிக்காக உங்களிடம் ஓட்டு சேகரிக்க வந்துள்ளேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று உங்களிடம் கேட்டு வந்துள்ளார். இந்த தேர்தலில் அவருக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.இந்த தேர்தல் பொது தேர்தல் கிடையாது இந்த தேர்தலில் யாரும் புதிதாக ஆட்சிக்கு வரப்போவது கிடையாது. ஆட்சியை விட்டு போகப் போவதும் கிடையாது. இன்னும் இரண்டு ஆண்டு காலம் பதவி உள்ள இடைத்தேர்தல் ஆகும்.விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து நல்ல முடிவை எடுங்கள்.பெண்களுக்கு முன்னேற்றம் இல்லை. வேலை வாய்ப்பு இல்லை தொகுதியில் ஒரு தொழிற்சாலை கூட இல்லை.இந்த தேர்தல் உங்களுக்கான ஒரு வாய்ப்பு. கோபத்தை வெளிப்படுத்துகின்ற தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும்.இவ்வாறு மாநிலத் தலைவர் அன்புமணி பேசினார்.சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல் மணிமாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ