உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி பலாத்காரம் செய்து கொலை தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 42; குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த, 2019 ஆக., 3ம் தேதி ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் அவரை கொலை செய்து, கல்குவாரி குட்டையில் உடலை வீசி தலைமறைவானார்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பிரம்மதேசம் போலீசார், மகேந்திரனை கைது செய்து, அவர் மீது விழுப்புரம் சிறப்பு கோர்ட்டில் கொலை மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, மகேந்திரனுக்கு சாகும் வரை ஆயுள் சிறையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ