மேலும் செய்திகள்
நாளை மின்தடை
16 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
16 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
16 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
16 hour(s) ago
வானுார்: பாப்பாஞ்சாவடி மதுரை வீரன் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பாஞ்சாவடி கிராமத்தில் ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ பொம்மியம்மன் சமேத மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதியும், 10:25 மணிக்கு, மதுரை வீரன் கோவிலில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் வீரமுத்து, ஊர் முக்கியஸ்தர்கள் பிரகாஷ், குமார், கிருஷ்ணமூர்த்தி, முருகதாஸ் மற்றும் உபயதாரர்கள், ஊர் பொது மக்கள் பங்கேற்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago