மேலும் செய்திகள்
கலை விழா
17-Feb-2025
மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் உலக தாய்மொழி தின விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். புதுவை பல்கலைக் கழக தமிழ்த் துறை பேராசிரியர் லட்சுமிதத்தை, சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான் மால் ஜெயின் கல்லுாரி தமிழ் துறை இணை பேராசிரியர் கோதண்டராமன் ஆகியோர் தமிழ் மொழி உலக அளவில் எவ்வாறு வளர்ந்துள்ளது குறித்து பேசினர். தமிழ்த் துறைத் தலைவர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.
17-Feb-2025