உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

விழுப்புரம் : விழுப்புரத்தில் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழா கடந்த 20ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வும், யாகசாலை பிரவேசமும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலை பூஜை நடந்தது. பிறகு கோ பூஜை, யாகங்களும், கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு, முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை