உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நபார்டு இயக்குனர் நேரில் ஆய்வு

நபார்டு இயக்குனர் நேரில் ஆய்வு

மயிலம்: மயிலம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், தேசிய விவசாய கூட்டுறவு மார்க்கெட்டிங் பெடரேஷன் செயல் இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.திண்டிவனம், எண்ணெய் மற்றும் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் குழுவில் தயார் செய்யப்படும் விவசாய உற்பத்தி பொருட்கள் கூட்டேரிப்பட்டு மயிலம் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.இந்தப் பொருட்களின் தரத்தை தேசிய அளவில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனமான நபார்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் குழுவினர், சென்னை பிரிவு அலுவலர் விஜயராஜூடன் ஆய்வு செய்தனர்.மேலும் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்திருக்கும் பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விற்பனைப் பொருட்கள் மற்றும் இயற்கைப் பொருட்களை ஆய்வு செய்து குழுவின் சேர்மன் ஆதிபகவன், நிர்வாக இயக்குனர் கலா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி