உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு, மயிலம் பொம்புர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் சிவசுப்ரமணியன் திட்ட அறிக்கை வாசித்தார்.எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார், பேராசிரியர் விஜயானந்த் மயிலம் சேர்மன் யோகேஸ்வரி சிறப்புரையாற்றினர். ஊராட்சி தலைவர் முருகன் துவக்கவுரையாற்றினார்.முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மயிலம் ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன், மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், கவுன்சிலர் செல்வகுமார், முன்னாள் சேர்மன் தசரதன், துணை சேர்மன் புனித ராமஜெயம் வாழ்த்திப் பேசினர். திட்ட அலுவலர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி