உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லுாரியில் யோகா தினம் கடைபிடிப்பு

வானுார் அரசு கல்லுாரியில் யோகா தினம் கடைபிடிப்பு

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி இந்திய அளவில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி, இக்கல்லுாரியில் இயங்கும் மாணவர்கள் செஞ்சிலுவைச் சங்கமும், புதுச்சேரி சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையமும், வானுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, யோகா பயிற்சியின் முக்கியத்துவம், நன்மைகள், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.சிறப்பு அழைப்பாளர்களாக ஆராய்ச்சி அலுவலர்கள் டாக்டர் சண்முகராம், டாக்டர் லாவண்யா ஆகியோர், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். குழந்தை வளர்ச்சிதிட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி சிறப்புரையாற்றினார்.யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவைச்சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி செய்திருந்தார். தமிழ்த் துறைத் தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை