உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளவனுார் அருகே கார் மோதி முதியவர் பலி

வளவனுார் அருகே கார் மோதி முதியவர் பலி

விழுப்புரம்: வளவனுார் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த பக்கிரிபாளையத்தைச் சேர்ந்தவர் ஷேக் கரீம், 60; இவரது உறவினர் ஷேக்கரீம், 37; இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வளவனுார் அடுத்த பக்கமேட்டு பாதை மேம்பாலம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது.இந்த விபத்தில், இருவரும் படுகாயமடைந்தனர். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஷேக் கரீம், 60; இறந்தார். புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ