மேலும் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்கள் முன்வைத்த 22 கோரிக்கைகள்
12-Aug-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில், அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் சார்பில், ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில், தரமான பொருள்களை பொட்டலம் போட்டு, அரசு தரப்பில் வழங்க வேண்டும். தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க, கடைகளுக்கு 100 சதவீதம் பொருள்கள் ஒதுக்கீடு செய்து அனுப்ப வேண்டும்.பொது மக்களுக்கு தேவையான பொருள்களை மட்டும் வழங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கும் ஒரே காலத்தில் பொருள்களை வழங்க வேண்டும். பொது மக்கள் வாங்காத தேவையற்ற பொருள்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாட்டினை போக்க வேண்டும். பொருள்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தால், நேற்று ஒரு நாள் முழுவதும், மாவட்டத்தில், மொத்தமுள்ள 1,254 ரேஷன் கடைகளில், 5,00க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தது. குறிப்பாக, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட கிராமப்புறங்களில் அதிகளவில் கடைகள் மூடப்பட்டிருந்தன. நகர்புற ரேஷன் கடைகள் மட்டும் சில இடங்களில் இயங்கின.
12-Aug-2024