மேலும் செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
31-Aug-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 50; இவர், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே பாலு இறந்தார். கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து மோதிய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
31-Aug-2024