உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு மனை தகராறு ஒருவர் கைது

வீட்டு மனை தகராறு ஒருவர் கைது

மயிலம் : மயிலம் அருகே முன் விரோத தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அடுத்த தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் 52; இவரது வீட்டின் அருகே வசிப்பவர் முருகன். இருவருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டு மனையை அளக்க முருகன் ஏற்பாடு செய்தார். இதனால், முருகன், குமார் குடும்பத்தினருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இதில் குமார் படுகாயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், முருகன், மனோகர், ஆண்டாள் ஆகியோர் மீது மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ