உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆன் லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் பகுதியில் வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கோலியனுார் பஸ் நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்த கோலியனுாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பழனியை, 40; போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆன் லைன் லாட்டரி சீட்டு ஆவணங்கள், 150 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ