உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மனு

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மனு

விழுப்புரம் : தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாய பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்திக்கு இரு மடங்கு லாபம் வழங்க வேண்டும். மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது. எம்.எஸ்., சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்.விவசாய நிலங்களில் காட்டுபன்றி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளையும் தாக்குகின்றன. இதை விலங்கின பட்டியலில் இருந்து நீக்கி, சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ