மேலும் செய்திகள்
நாளை மின்தடை
11 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
11 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
11 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
11 hour(s) ago
வானுார்: வானுார் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிற்கும் பயணிகளை ஏற்றாமல், மேம்பாலத்தின் வழியாக சென்ற தனியார் பஸ்களை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக புதுச்சேரியில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகிறது. பைபாஸ் சாலையில் புளிச்சப்பள்ளம், தென்கோடிப்பாக்கம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மேம்பாலத்தின் மேல் பகுதியில் நிற்கும் பயணிகளை மட்டுமே தனியார் பஸ்கள் நின்று ஏற்றிச் செல்கிறது. இதனால் கீழ் பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:45 மணியளவில் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த 3 தனியார் பஸ்களையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வானுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து தனியார் பஸ் உரிமையளர்களையும் அழைத்து பேசி, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையும் மீறி செல்லும் பஸ் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் போலீசார் உறுதி அளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள், 9:05 மணியளவில் பஸ்களை விடுவித்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago